பெரியகல்லாற்றில் ‘மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடு’; –என்னும் நூல் மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு ஒலித்தட்டு எனபனவற்றுக்கான வெளியீட்டு விழா
ரவிப்ரியா
சைவப் புலவர்
சைவ
பண்டிதர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் எழுதிய
‘மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடு‘; என்னும் நூல் மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு
ஒலித்தட்டு எனபனவற்றுக்கான வெளியீட்டு விழா
பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் மணிமண்டபத்தில் இன்று சனிக்கிழமை (25) மாலை நடைபெறவுள்ளது.
பெரியகல்லாறு ஸ்ரீ
சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய
வண்ணக்கர் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன காணி
நீர்
வழங்கல் பெண்கள் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ஆகிய
அமைச்சின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்
இந்துசமய கலாசார
அலுவல்கள் திணைக்கள உதவிப்
பணிப்பாளர் ஹேமலோஜினி, கிழக்கு பல்கலைக் கழக
கலை
கலாசாரபீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம்
ஆகியோர் கலந்து
கொள்ளுகின்றனர்.
சிறப்பு அதிதிகளாக சைவப்
புலவர் சைவபண்டிதர் கலாநிதி சா.தில்லைநாதன், கிழக்கு பல்கலைக்கழக இந்து
நாகரீகத்துறை தலைவர்
கலாநிதி நா.வாமன் ஆகியோர் கலந்து
கொள்ளுகின்றனர்.
அத்துடன் கௌரவ
அதிதிகளாக ஓய்வுபெற்ற உதவிக்
கல்விப் பணிப்பாதளர் ஜி.அன்னநவபாரதி, ஓய்வுநிலை பொறியியலாளர் த.குகேந்திரன், அழைப்பு அதிதிகள் என
மேலும்
பலரும்
கலந்து
கொள்ளுகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சுஜாராஜினி வரதராசன், பிரதேச
வைத்திய அதிகாரி டாக்டர் ஞா.சஞ்ஜேய் சட்டத்தரணி திருமதி ஜெசிந்தா இராஜேந்திரன் மாவட்ட இந்து கலாசார
உத்தியோகத்தர்களான கி.குணநாயகம் (மடடக்களப்பு மாவட்டம்), கு.ஜெயபாரதி (அம்பாறை மாவட்டம்) ஆகியோரும் கலந்து
கொள்ளுகின்றனர்.
அழைப்பு அதிதிகளாக ஆலய
நிருவாக சபையின் அடப்பன்மார்களான க.நிதுப்ஷன் த.புருசோத்மன் பே.ஜெயப்பிரசாத் சா.கிருஷ்ணபிள்ளை க.முரளி செ.றஜேந்திரன் லோ.அன்புஜன் கு.கோகலசிங்கம் சி.பேரின்பராசா த.விமல் ஆகியோர் கலந்து
கொள்ளுகின்றனர்.
நூல் அறிமுக
உரையை
கிழக்குப் பல்கலைக் கழக
விரிவுரையாளர் க.கோபிநாத்தும் நூல் மதிப்பீட்டுரையை சைவப்
புலவர்
சைவ
பண்டிதர் கிழக்குப் பல்கலைக் கழக
பிரதி
நூலகர்
செ.சாந்தரூபனும் நிகழ்த்துவர்.
அத்துடன் ஒலித்தட்டு வெளியீடு கணேஷாலயா நடனப்பள்ளி மாணவர்களினதும் பரதகலாஞ்சலி நாட்டியாலயத்தின் மாணவர்களினதும் நடன
கலை
நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும் சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெறும்.
, பெரியகல்லாற்றில் ‘மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடு’; –என்னும் நூல் மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு ஒலித்தட்டு எனபனவற்றுக்கான வெளியீட்டு விழா