ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை !

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 59,400 மின்சார செயலிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கிடைக்கப் பெற்றுள்ள 3300,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளுக்கு அமைய மின் தடங்கல்களைச் சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் வரையில் 330,000 பேருக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

, நாட்டின் பல பகுதிகளில் மின் தடை !

Back to top button