சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு !
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில், சிவனொளிபாத மலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த புனித விக்கிரங்கள் மற்றும் ஆபரணங்கள் நல்லதண்ணியில் உள்ள விகாரைக்கு கொண்டு வரப்பட்டது.
சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தேரரினால் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு மேற்படி விக்கிரகங்கள் மற்றும் ஆபரணங்கள் இன்று காலை இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்துச் செல்லப்படும்.
இவை நோட்டன் – லக்ஷபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை வழியாக பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமை போன்று இந்த முறையும் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் வருகைதந்திருந்ததாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
, சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு !