ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

11 வயது சிறுவன் கண்ணீர் மல்க துக்கம் !

உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையிட்டு எம்பிலிப்பிட்டிய போதிராஜ மகா வித்தியாலயத்தை சேர்ந்த 11 வயதுடைய மாணவரான கய்து கித்ன கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விஜயம் செய்த போது, அவருக்கு இச்சிறுவன் வெற்றிலை கொடுத்து வரவேற்றுள்ளான்.

இதன்போது இச்சிறுவனை அவர் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

“நான் வெற்றிலை கொடுத்து அவரை வரவேற்றேன், என்னை அவர் கட்டியணைத்தார், முத்தமிட்டார். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். அந்த அபூர்வமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடைய மொழியில் என்னென்னவோ கூறினார். எனக்கு அவரது மொழி புரியாத போதும், அவர் என்னை பாராட்டுவது புரிந்தது.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரண செய்தியானது பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் எனக்கு கூறப்பட்டது. அப்போது அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் அப்போது கண்ணீர் விட்டு அழுதேன்” என ஊடகங்களுக்கு அம்மாணவரான கய்து கித்ன கண்ணீர் மல்க கூறினார்.

, 11 வயது சிறுவன் கண்ணீர் மல்க துக்கம் !

Back to top button