வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டுகோள்
அரச விடுமுறை நாட்களில் வெள்ளவத்தை பிரதேச காலி வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்.பி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து நீண்ட நாட்களாக புகார் கிடைத்து வந்ததை தொடர்ந்து உரிய இடத்துக்கு நேற்று சென்ற மனோ கணேசன் எம்.பி., நிலைமையை ஆராய்ந்தார். இதன்போது அங்கு அரச விடுமுறை தினமான நேற்று வாகன நிறுத்துமிட கட்டணம் வசூலிக்க முயன்ற மாநகர சபை ஒப்பந்தக்காரரின் ஊழியரை அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி.யின் அழைப்புக்கமைய அவ்விடத்துக்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஐ.பி.மதுசங்க, நிலைமையை ஆராய்ந்தார்.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் கொழும்பு மாநகர சபை போக்குவரத்து பிரதான பொறியியலாளரிடம் மனோ கணேசன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
, வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டுகோள்