மே 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம் !
தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், அந்த அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி மே 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெங்கு தடுப்பு வாரத்தின் போது கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, அரச நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், புதிய குடியிருப்புகள் போன்றவற்றைச் சுற்றிப் பரவும் டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய சாகல ரத்நாயக்க, இதனைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் மே மாதத்தில் ஆயிரத்து எண்ணூற்று பத்து டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஒன்பது மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
, மே 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம் !