வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் கைது !
51 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம்,மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகப் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை 05.15 மணியளவில் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 17 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 17,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு, மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகரொருவர் இன்று (23) அதிகாலை 05.20 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 24 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 24,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இவரிடமிருந்து 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 9,800 வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
, வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் கைது !