ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரிய, மடகட பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

Back to top button