ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வீதியில் விழுந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
ஹங்வெல்ல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் வீதியில் விழுந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் இன்று வியாழக்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மற்றொரு குழுவினருடன் வெசாக் பண்டிகைக்கால உணவு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான மின் உற்பத்திக்கான எரிபொருளை எடுத்து வந்து கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே விழுந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபர் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபுல் அநுருத்த தெஹிவல லியனகே என்பவராவார்.
, வீதியில் விழுந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !