காத்தான்குடி ஆரையம்பதியில் இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது !
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவரை நேற்று திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் வீடொன்றில் 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசிகளை கொள்ளையிட்டுள்ளார்.
மற்றையவர் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அதே பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இரு மாடுகளைத் திருடியுள்ளார் .
இந்த இரு வெவ்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒருவரால் திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
, காத்தான்குடி ஆரையம்பதியில் இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது !