மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் !

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையை விட அதிகமாக ஒரு கோடி வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி தலைவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என ஜக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு, மண்முனைபற்று பிரதேச அமைப்பாளர் ஏ.ரி. முகமட் அஸ்மியின் வலயக்காரியாலய திறப்பு விழா நேற்று (20) மாலை பாலமுனையில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் நாடாவை வெட்டி காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜ.தே.கட்சி கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது அதன் அடிப்படையில் கட்சி செயலாளர் நாடளாவிய ரீதியில் 153 தொகுதிகளில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது.
இந்த தொகுதிவாரியான அமைப்பாளர்களுக்கு இனைவாக் வலய ரீதியான அமைப்பளர்களுக்கான நியமனம் வழங்கியதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரம் பிரதேச காரியாலயம் திறந்துவைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமுனை முதலாம் பிரிவில் அஹமட் றிஸ்வி வீதியில் 5 வது காரியாலயம் திறந்து வைத்துள்ளோம்.
இருந்த போதும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இந்த தேர்தலை வெளிநாடுகள் மற்றும் இலங்கை மக்கள் எதிர்பார்கின்றது போல எமது கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே இலங்கையில் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையைவிட அதிகமாக வாக்குகளை பெறுவார்.
எனவே அவர் வெற்றிபெற உங்களது உறவினர்கள் அயலவர்கள் நண்பர்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்க நீங்கள் அனைவரும் அயராது உழைக்கவேண்டும். அப்போது தான் நாங்கள் எதிர்பாக்கின்ற இலக்கையடையமுடியும் என தெரிவித்தார்.
, மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் !