ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பாடசாலை மாணவன் மாயம் : பொலிஸார் விசாரணை !
மதுரங்குளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையில் 7ம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவன் மதுரங்குளி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் இவரது பெற்றோர்கள் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர் .
இந்நிலையில் மாணவனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது .
காணாமல் போன மாணவன் தொடர்பிலான விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
, பாடசாலை மாணவன் மாயம் : பொலிஸார் விசாரணை !