ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வர்த்தக நிலையத்தில் கொள்ளை : நால்வர் கைது !

காலி ,இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வக்வெவ ,எம்பிலிப்பிட்டிய மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 முதல் 61 வயதுக்குற்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு அருகில் உள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் என்பதுடன் அவரது கண்காணிப்பின் கீழ் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர்கள் நால்வரும் இதற்கு முன்னர் வத்தளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மித்தெனிய ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, வர்த்தக நிலையத்தில் கொள்ளை : நால்வர் கைது !

Back to top button