ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு  மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள்  https://apply.sliate.ac.lk/ எனும் இணையம்தளத்தின் ஊடக  கோரப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு உயர்தொழிநுட்பக்கல்லூரி கிழக்கு மாகாணத்திலுள்ள அரச தனியார்  கணக்காளர்களையும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில ஆசிரியர்களையும் அதிகப்படியான வினைதிறனுடய அரச தனியார் பட்டதாரி பணியாளர்களை உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் உருவாக்கி வழங்கியுள்ளது .

நிறுவனத்தில் கல்வி கற்பதன்மூலம் மாணவர்களுக்கு பின்வரும் நன்மைகள் ஏற்படுகின்றது

முழுநேர மாணவரகளுக்கு முற்றிலும் இலவச கல்வி காலத்துக்கு ஏற்ப மாற்றமடையும் பாடவிதானம் , மிகவும் நிபுணத்துவமான விரிவுரையாளர்கள்  மாணவர்குக்கு இலவச போக்குவரத்து பயணச்சீட்டு மாதாந்த மகாபோல கோடுப்பனவு இலவச Wi-Fi வசதி கைத்தொழில் சுற்றுலா வசதி  உரிய காலத்தில் கற்கைநெறிகள் முடிவுறுத்தப்படல்  வீட்டுலிருந்து குடும்பத்திற்கு உதவுபுரித்து பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு , 
Online  விண்ணப்பிப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் ஆரையம்பதி  கோவில்குளத்திலுள்ள அலுவலகத்திற்கு நேரடியாகவந்து உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் 
விண்ணப்ப முடிவுத்திகதி 27.05.2024
https://apply.sliate.ac.lk/ இணயத்தளத்திற்கு சென்று SLIATE மக்கள் வங்கி  025200113397613 கணக்கிலக்கத்திற்கு 1000/-செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்து online மூலமாக விண்ணப்பிக்கலாம்.
HNDA (Higher National Diploma in Accountancy) – Degree equivalent  
HNDIT ( Higher National Diploma in Information Technlogy) -NVQ Level 6
HNDE ( Higher National Diploma in English ) 2 Years 

ஆகிய கற்கை நெறிகள் முழுநேரம் இலவச கற்கை நெறிகளாகவும்
உத்தியோகஸ்தர்கள் மற்றும் சுயதொழில் ஒன்றினை மேற்க்கொள்பவர்கள்
உரிய கட்டணத்துடன் பகுதிநேரமாகவும் மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக்க்லூரியில் பயில முடியும்.
மேலதிக விபரங்களுக்கு இணயத்தளத்திலுள்ள அரச வர்த்தகமானியை பார்வையிடவும்

மேலதிக விபரங்களுக்கு


செல்வரெத்தினம் ஜெயபாலன் 
பணிப்பாளர்
உயர்தொழில்நுட்பக்கல்லூரி 
மட்டக்களப்பு
தொலைபேசி 

0652247519
0778641182 
Email : atibatticaloa.ac.lk

, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Back to top button