ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வெளிநாட்டு பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி நகை,பணம் கொள்ளை !

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் அங்கிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய நேபாளம் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குறித்த ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும்போது அறையிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் இவரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி பணம், நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் களுத்துறை வடக்கு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

, வெளிநாட்டு பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி நகை,பணம் கொள்ளை !

Back to top button