ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது !

இலங்கையைச் சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நால்வரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ISIS பயங்கரவாதிகள் எதற்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தனர் என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

, இலங்கையைச் சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது !

Back to top button