Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsசட்டவிரோத மதுபானம் மற்றும் உபகரணங்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது !

சட்டவிரோத மதுபானம் மற்றும் உபகரணங்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது !

சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் என பொலிஸார் தெரிவித்தனர் .

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த வீட்டில், சட்டவிரோதமாகக் காய்ச்சப்பட்ட மதுபானம், எரிவாயு அடுப்பு, பீப்பாய், அதைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர் .

, சட்டவிரோத மதுபானம் மற்றும் உபகரணங்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்