ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானம் !

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
25,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க பேரவையின் பொதுச் செயலாளர் டி சுரஞ்சீவ தெரிவித்துள்ளார்.
, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானம் !