ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

தாண்டியடியில் மீண்டும் வைத்திய சேவை

 

அதி கஸ்டப் பிரதேசமான தாண்டியடி பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க  கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி டொக்டர் சகீலா இஸ்ஸடீன்  மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர்

எம்.சி.மாஹீர் ஆகியோரின் பணிப்புரையின் பேரில்  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பீ..மோகனகாந்தன் அவர்களால் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் உதவியுடன் தாண்டியடி PMCU மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வைத்திய சேவைகள் நடைபெற்றது.

இவ் வைத்திய சேவையானது வாரத்தில் இரு நாட்கள் செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில் காலையில் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் வரை நடைபெறும் என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  பீ.டொக்டர் மோகனகாந்தன்  தெரிவித்தார்.

, தாண்டியடியில் மீண்டும் வைத்திய சேவை

Back to top button