ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
1509 இராணுவத்தினர் தரம் உயர்வு !
15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழமையான மற்றும் தொண்டர் படையணியின் 114 அதிகாரிகள் மற்றும் 1,395 இதர நிலை சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு உயர்வு பெற்றுள்ளனர்.
போர் வீரர்களின் நினைவு தினமான இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து படைப்பிரிவு உறுப்பினர்களுக்கும் இந்த தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
, 1509 இராணுவத்தினர் தரம் உயர்வு !