Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமீன்பிடி படகு விபத்து 3 மீனவர்கள் மீட்பு :ஒருவர் பலி : மற்றுமொருவர் மாயம் !

மீன்பிடி படகு விபத்து 3 மீனவர்கள் மீட்பு :ஒருவர் பலி : மற்றுமொருவர் மாயம் !

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் மூன்று பேர் உயிருடன் வெள்ளிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை நிந்தவூர் 9 ம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 12 ம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து, அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதன் போது கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினார் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர்.

இதில் உயிருடன் மீட்டகப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

, மீன்பிடி படகு விபத்து 3 மீனவர்கள் மீட்பு :ஒருவர் பலி : மற்றுமொருவர் மாயம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்