60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் கைது !

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கொடை, முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (17) இரவு 11.25 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 602 கிராம் நிறையுடைய “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (18) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
, 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் கைது !