ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பொத்துவிலில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட உள்ளது

(எஸ்.அஷ்ரப்கான்)

பொத்துவிலில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் தெரிவித்தார்.

“என்ன செய்தார் எம்.பி” எனும் தொனிப்பொருளில் பொத்துவில் பிரதான வீதியில் நேற்று (17)  இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,

உங்கள் எம். பி. இனுடைய பெருமையை இந்த ஊர் எப்படி புரிந்து இருக்கிறதோ இல்லையோ இந்த ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் புரிந்து இருக்கிறார்கள் அவர்கள் நிச்சயமாக சாட்சி சொல்வார்கள்.

அம்பாறை மாவட்ட காணி  விடுவிப்பு சம்பந்தமாக காத்திரமாக செயற்பட்ட எம்.பி யார் என்று கேட்டால் மக்களுக்கு தெரியும் முஸாரப் எம்.பி. என்று சொல்வார்கள்.

இந்த காணி விடுவிப்புக்காக நான் கடுமையாக செயற்பட்டு வருகிறேன். பொத்துவிலில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட உள்ளது.

உங்கள் எம் பி னுடைய பெருமையை இந்த ஊர் எப்படி புரிந்து இருக்கிறதோ இல்லையோ இந்த ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் புரிந்து இருக்கிறார்கள் அவர்கள் நிச்சயமாக சாட்சி சொல்வார்கள்.

எனவே ஊர் ஒன்றாக இருங்கள் எம்.பி என்பது ஒரு இலக்கல்ல. அதையும் தாண்டி நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் கூறினார்.

, பொத்துவிலில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட உள்ளது

Back to top button