Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமுன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் !

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் !

(எம் .எம்.றம்ஸீன்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காங்கேயனோடையில் சமூகப் பணியில் ஈடுபட்ட சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் அரச சேவையிலிருந்து பதவி உயர்வு பெற்ற காங்கேயனோடைச் சேர்ந்த இரு பெண் உத்தியோகத்தர்களை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார

வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த நிகழ்வில்
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பது பற்றி இன்னும் தெரியாது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்ந்து யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்று கட்சி முடிவெடுக்கும்.

இந்த நிலையில் இன்னும் யாரையும் ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடைய நிலவரம் இலங்கையினுடைய பொருளாதார நிலவரம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமை போன்ற பல்வேறு விடயங்களை வைத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கும்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கடந்த சில வருடங்களாக சந்தித்து வருகிற சவால்கள் தற்போது நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் மேலும் குறிப்பிட்டார்.

, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்