பிரதான செய்திகள்
சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்
சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தாயார் காலமானார்.
கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் இன்று (27.02.2024) மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச் சடங்கு
முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த அவர், இன்று உலகை விட்டுப் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிச்சடங்குகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.