பிரதான செய்திகள்

கில்மிஷா ஒரு சாபக்கேடு.!! ரணிலின் புரியாணியோடு புதைந்துபோன தமிழர் மானம்.!

[ad_1]

கில்மிஷா வெற்றியும் அதன் பின்னரான வெற்றிக்கொண்டாட்டங்களையும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக ரணில் உடனான சந்திப்பின் பின்னர் சர்ச்சைகள் கொஞ்சம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் முன்னர் எமது ஊடகமும் வெற்றிக்கொண்டாட்டங்கள் பற்றிய எமது பார்வையையும் அதே வடமாகாணத்தில் உள்ள சிறுமி ஒருவர் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குப்பற்றி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த கணேஷ் இந்துகாதேவியை ஏன் எல்லோரும் மறந்தார்கள் என்ற கேள்வியினை எழுப்பியிருந்தோம்.

அதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்களால் அவ்விடயம் தொடர்பான ஒரு பதிவு அவரது முகநூல் ஊடாக வெளியிடப்பட்டிருந்தது. அது பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவும் மாறியிருந்தது.

தற்போது ரணில் அவர்களை சந்தித்து உணவருந்தி பாடலும் பாடிக்காட்டிய கில்மிசா தொடர்பான காணொளி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையை திறமையாக பாருங்கள் அதை அரசியல் ஆக்காதீர்கள் என பலர் சொன்னாலும் இந்த விடயத்தில் நாம் மௌனிகளாக இருந்து கடந்து போய்விடமுடியாது.

கில்மிஷா

காரணம் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் பிண்ணனி பல கோணங்களில் எம்மையும் மக்களையும் ஆராயவைக்கிறது. அவர்கள் தொடர்பாக ஆழமான நாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. கடந்த கால வரலாறுகள் தெரிந்த ஒவ்வொரு தமிழர்களும் யார் எப்படி என்ன செய்தார்கள் என்பதை இலகுவாக புரிந்துகொள்ளும்.

416036620 332456669610727 7942939017877134408 n

கில்மிசா விடயத்தில் தமிழர்கள் ஏதோ ஒரு சதி வலைக்குள் லேசாக சிக்கிக்கொள்கிறோமா என்ற ஒரே ஒரு கேள்வி மட்டுமே எம்மிடத்தில் உள்ளது.

READ ALSO :-  கில்மிஷா, அசானி விடயத்தில் “தங்கமங்கை” இந்துகாதேவியை மறந்த ஈழத்தமிழர்கள்.!!

ரணில் விக்ரமசிங்க என்பவர் மக்கள் ஓட்டுக்கள் இல்லாமலே சனாதிபதியாக வந்தவர். அடுத்த தேர்தலில் அவருக்கு நிச்சயம் வாக்கு வங்கி என்பது பலமான தேவை.

கில்மிஷாவின் கொண்டாட்டங்களும் சில முட்டாள்களும்..!!

அதுவும் தமிழர்களின் ஓட்டுக்கள் நிச்சயம் அவரது வெற்றியை தீர்மானிக்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. அதற்காக காத்திருந்து போட்ட தூண்டலாகவே நாம் இதனை பார்க்கவேண்டியிருக்கிறது. இனி யாழ்ப்பாண தமிழர்களின் ஓட்டுக்கள் அல்லது கில்மிசாவில் தீவிர ரசிகர்களின் ஓட்டுக்கள் ரணில் பக்கம் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கில்மிஷா, அசானி, தங்கமங்கை, இந்துகாதேவி, ஈழத்தமிழர்கள், Jaffnanews, Kilmisha

எனினும் இவ்வாறான விடயங்களை தமிழர்கள் நாம்தான் ஆழமாக ஆராயவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். இதனை இன்னும் பல கோணங்களில் சிந்தித்துப்பார்க்கவேண்டியது நமது கடமை. ரணில் விக்ரமசிங்கவின் கில்மிசாவுடனான சந்திப்பு பற்றியும் அதில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் ஒரு ஈழத்தமிழர் சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

கில்மிஷா, அசானி, தங்கமங்கை, இந்துகாதேவி, ஈழத்தமிழர்கள், Jaffnanews, Kilmisha

அதனையும் குளோபல்தமிழா இணையத்தள வாசகர்களுக்காக தருகிறோம். தெரிவிப்பது நாம் ஆகினும் தீர்மானிப்பது நீங்களே.. இது தவிர ஒரு பெண்ணின் பெயரை களங்கப்படுத்துவது எமது நோக்கமல்ல என்பதையும் மிகத்தெளிவான இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இதையும் படியுங்கோ :- கில்மிஷாவின் கொண்டாட்டங்களும் சில முட்டாள்களும்..!!

அரசியல் அறியாத அந்த அப்பாவி சிறுமியை சுற்றி அரசியல் சதிவலை பின்னப்படுவதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர்.



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button