ஆபாச காணொளியை காட்டி சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த முதியவர்
ஆபாச காணொளியை காட்டி சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த முதியவர் பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமியின் சகோதரியும் பல முறை துஷ்பிரயோகம்
சந்தேக நபரின் அயல் வீட்டில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி வசித்து வந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் , சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியிடம் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி , முதியவர் குறித்து தனது தாயிடம் தெரிவித்த நிலையில் தாய் அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை உயிரிழந்த சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சாகோதரியையும் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.