பிராந்திய செய்திகள்கிழக்கு மாகாண செய்திகள்நிகழ்வுகள்
கல்முனை புதிய கலாசார கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வு

நேற்று 19.2.2024 அன்று கல்முனை புதிய கலாசார கட்டிட வளாகத்தில்
இயற்கையைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் எமது SPANDஅமைப்பின் அனுசரணையோடு மரநடுகை நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோஸ்தர் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் சங்கத் தலைவர் மற்றும் கலாசார உத்தியோஸ்தர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து மரக்கன்றுகளை நட்டு மகிழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.





வாழும் நாளின் வரமது யாதெனின்
மாழும் காலம் முடியும் முன்பே
மரமொன்றை நட்டிடு
மரணத்தை வென்றிடும்
மகிமையைப் பெற்றிடு
அன்றைய நாளில்
பாட்டன் நட்டான்
நல் பழந்தரும் தருக்களை
இன்றைய நாளில்
வெட்டி வீழ்த்துகிறோம்
வெட்டவெளி ஆக்குகிறோம்
மொட்டையான பூமியில்
கொட்டும் மழைகேட்கிறோம்
மனநிலை மாற்றுவோம்
மரக்கன்றுகளை நட்டிடுவோம்
செளிப்பான பூமியில்
விழிப்பாக வாழ்ந்திடுவோம்