Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsகணவன் கைது : மனைவியை வாந்தியெடுக்க வைத்த போலீசார்..!!

கணவன் கைது : மனைவியை வாந்தியெடுக்க வைத்த போலீசார்..!!

கணவன் கைது : மனைவியை வாந்தியெடுக்க வைத்த போலீசார்..!! திருமணமான தம்பதி கைது செய்யப்பட்டபோது, அந்தப் பெண், இரண்டு குளிசைகளை விழுங்கிவிட்டார். அதனையடுத்து அப்பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வாந்தி எடுக்க வைக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மனைவியை வாந்தியெடுக்க

கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது,  01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் விழுந்தன என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்