Saturday, April 20, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsமரக்கிளையில் மோதி ஒருவர் பலி : முல்லைத்தீவு பகுதியில் சோகம்

மரக்கிளையில் மோதி ஒருவர் பலி : முல்லைத்தீவு பகுதியில் சோகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சனிக்கிழமை  (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு  பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் தனது தொழிலை நிறைவு செய்துவிட்டு வீடு  திரும்பும் வழியில் தேவிபுரம் பகுதியில்  குறித்த நபர் பயணித்த உந்துருளி வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கிளையில்  மோதி விபத்துக்குள்ளானதில்   உயிரிழந்துள்ளார்.

தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சண்முகம் தவசீலன்

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்