பிராந்திய செய்திகள்கிழக்கு மாகாண செய்திகள்

மட்டக்களப்பு சரணாலயத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் பல இலட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் சஞ்சரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுள், ஆஸ்திரேலிய வெள்ளை ஐபிஸ் (Australian White Ibis ) எனப்படும் இனப் பறவைகளே அதிகளவு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த பறவை இனம், வருடத்தில் மார்கழி மற்றும் தை, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீண்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை


இந்நிலையில், ஏத்தாலைக் குளத்தில் சிலர் இரவு வேளைகளில் கழிவுகளைக் வீசுவதனால் அக்குளம் மாசடைந்து வருவதோடு, அந்த குளத்தில் வாழும் பறவைகளும் பாதிப்புக்குள்ளாகுகின்றன.

மேலும், பறவைகள் இரவு வேளைகளில் வேட்டையாடப்படுவதாகவும், அக்குளத்தை அண்டியுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள் மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button