யாழில் தொடர் காய்ச்சலால் இளம் ஆசிரியை உயிரிழப்பு.! யாழ்ப்பாணத்தில் ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டைச் சேர்ந்த சங்கரி மதிரூபக்குருக்கள் (வயது-33) என்ற ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஈமோக்குளோபின் குறைபாடு
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஆசியியை ஈமோக்குளோபின் குறைபாட்டால் மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post யாழில் தொடர் காய்ச்சலால் இளம் ஆசிரியை உயிரிழப்பு.! appeared first on Globaltamizha.com.