Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsநுவரெலியா - மவுண்ட் மேரி பகுதியில் வழுக்கி விழுந்தவர் மரணம்

நுவரெலியா – மவுண்ட் மேரி பகுதியில் வழுக்கி விழுந்தவர் மரணம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட் மேரி பகுதியில் மண்மேட்டிலிருந்து வழுக்கி விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து புதன்கிழமை (15) வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வழுக்கி விழுந்தவர் மரணம்

உயிரிழந்தவர் 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்றைய தினம் (15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செ.திவாகரன் டி.சந்ரு

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்