கிழக்கு மாகாண செய்திகள்பிராந்திய செய்திகள்

மட். ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்திற்கு புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக, புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரமொன்;று
அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபரால் விடுக்கப்பட்ட வேண்கோளுக்கு அமைய, அமரர் சிவலிங்கம் சோமசுந்தரம் ஞாபகார்த்தமாக, புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம், பாடசாiலை அதிபர் தம்பிராசா மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்திற்கு

சோமசுந்தரம் தவசுந்தரம், அகிலா அனுசீலன், கனகசபை சிவசுந்தரம் மற்றும் சபேசன் ஆகியோரின் நிதி உதவியில் இவ் புகைப்பட பிரதியெடுக்கும்
இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது.

புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில், அமரர் சிவலிங்கம் சோமசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்களான ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முனிசாமி உதயராஜ், உப தலைவர் சிவலிங்கம் கனகசபை உட்பட பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Back to top button