கிழக்கு மாகாண செய்திகள்பிராந்திய செய்திகள்
ஊடகவியலாளர்களை தடை செய்தது ஏன்..! கூட்டத்தில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்

மட்டக்களப்பில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளா்களை தடை செய்தது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றையதினம் (13.02.2024) இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஒரு சில ஊடகவியலாளர்கள் தமக்கு அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த ஊடகவியலாளர்களை சந்தித்த சாணக்கியன் இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் வினவுவதாக உறுதியளித்தார்.