மலையக செய்திகள்பிராந்திய செய்திகள்
தண்டவாளத்தினுள் சிக்கிய சடலம் : ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயிலில் மோதுண்ட நபரின் சடலம், இரண்டு தடங்களுக்கு இடையில் சிக்கியதால், கரையோர ரயில் சேவைகள் சில மணிநேரம் தாமதமடைந்தன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
மகொன பிரதேசத்திலேயே ரயிலுடன் நபரொருவர் மோதியுள்ளார். அவருடைய சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
இதனால், ருகுணு குமார் மற்றும் காலி குமாரி விரைவு ரயில்கள் முறையே 35 மற்றும் 30 நிமிடங்கள் தாமதமாகின என களுத்துறை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலியில் இருந்து கல்கிஸை வரைக்கும் பயணித்த 8319 என்ற இலக்கத்தைக் கொண்ட மெதுவாக பயணிக்கும் ரயிலிலேயே மோதுண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்ட சடலம், பயாகல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.