பிராந்திய செய்திகள்கிழக்கிலங்கை

தமிழர் பகுதியில் திடீரென தோன்றிய “இஸ்லாமாபாத்” என்ற புதிய கிராமம்.??!!

தமிழர் பகுதியில் திடீரென தோன்றிய “இஸ்லாமாபாத்” என்ற புதிய கிராமம்.??!!உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வமான இணையதளமான moha.gov.lk இல் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலக பட்டியலிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு-1 கிராம சேவகர் பிரிவு கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு முறையற்ற சட்டத்திற்கு முரணான முறையில் கல்முனை வடக்கு கிராம பிரிவுகள் பிளவு படுத்தப்பட்டு புதிய கிராம நிலதாரி பிரிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளது.

kalmunai Muslim section , Islamabad & kalmunai town ஆகியன புதிதாக முளைத்துள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் அதன் 29 கிராம பிரிவுகளும் அரசாங்க பதிவிலிருந்து மீண்டும் காணாமல் போயுள்ளது.

இதுபோன்ற செயற்பாடு இதற்கு முன்னரும் இடம்பெற்று பின்னர் மக்கள் எதிர்ப்பால் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது. அரச இணையத்தளங்கள் அரசியல்வாதிகளின் விளையாட்டு பொருளாக மாறியுள்ளது கவலைக்குரியது. அமைச்சின் செயலாளரே உங்கள் கவனத்திற்கு!!!

Back to top button