பிராந்திய செய்திகள்கிழக்கு மாகாண செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்து

மட்டக்களப்பிலிருந்து டயலோக் நிறுவன ஊழியர்கள் பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில்  திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.

டயலொக் நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கையில் குறித்த கார் பாதையை விட்டு விலகியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Back to top button