மன்னாரில் போதை மாத்திரைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது மன்னார், தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று மாலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் சிலர் தங்கியிருக்கின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதான நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் போதை மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேற்படி நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post மன்னாரில் போதை மாத்திரைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது appeared first on Globaltamizha.com.