Saturday, April 20, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsவாய்க்குள் திணிக்காதே வாந்தி வரும்: யாழ் யூரிப்பரும் நடிகையும்.!! (VIDEO)

வாய்க்குள் திணிக்காதே வாந்தி வரும்: யாழ் யூரிப்பரும் நடிகையும்.!! (VIDEO)

வாய்க்குள் திணிக்காதே வாந்தி வரும்: யாழ் யூரிப்பரும் நடிகையும்.!! (VIDEO) அண்மைக்காலமாகவே யாழில் இந்த யூரிப்பர்களின் வருகை மாரி மழைக்கு ஈசல் கிளம்பியது போல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அதற்காக ஒட்டுமொத்த யாழ் யூரிப்பர்களை நாம் குறைசொல்வது முற்றிலும் தவறு. ஏன் என்றால் அதில் பல யூரிப்பர்கள் சமுதாயம் சார்ந்த நல்ல விடயங்களோடு பயணிக்கிறார்கள்.

இன்று அரசியல் வாதிகள் செய்யாத பல உதவிகளை ஒரு சாதாரண யூரியுப்பாளர் வெளிநாட்டவர்களின் உதவியுடன் செய்து வருவது பாராட்டத்தக்க விடயம்தான். ஆனால் ‘எல்லாப்பாம்பும் படமெடுக்கிறதுஎன நாக்கிலியான் புழுவும் எழம்பி நானும் நானும் என்டதாம்’ என்பதுபோல பலரும் ஒரு கமராவையும் மைக்கையும் தூக்கிட்டு நிற்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஊடகவியலாளர்களின் தனித்துவத்தை கெடுப்பதாகவே இருக்கிறது இவ்வாறானவர்களின் நடவடிக்கை. உண்மையில் யூரிப்பர்களை ஊடகவியளாளர்களாக கணக்கில் எடுக்க கூடாது.

காரணம் செய்தி சேகரிக்க செல்லும் எந்த ஒரு ஊடகவியலாளனும் நடிகையோடு நின்று செல்பி எடுப்பதில்லை. நடிகையை பார்த்து கூச்சலிடுவதில்லை.. ஊடகம் ஊடகவியளாளன் என்பதற்கு சில ஒழுக்கம் கட்டுப்பாடுகள் இருக்கிறது.

ஆனால் யூரியுப்பர் செய்தி வெளியிடுகிறோம் என்ற பெயரில் தங்களை தாங்களே பிரபல்யப்படுத்தி காசு பார்க்கும் வேலைகளைத்தான் ஒருசிலர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அப்படித்தான் இருக்கிறது இன்றைய ஒரு சில யாழ் யூரிப்பாளர்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும். அண்மையில் யாழில் உள்ள ஒரு யுரியூப்பாளர், வருகைதந்த தென்னிந்திய பிரபலமான மைனா என்றறியப்படும் நடிகையின் வாக்குள் மைக்கை திணிக்க அவரும் சாதுவாக திட்டியுள்ளார்.

வாய்க்குள் திணித்தால் வாந்திதான் வரும்.. தள்ளி நில்லு.. தள்ளி நில்லு என அவர் திட்டிய வீடியோவை வெட்கம் இல்லாமல் அந்த யூரியுப்பார் அவருடைய சானலிலையே பதிவேற்றியும் உள்ளார்.

ஆர்வக்கோளாரில் நாம் என்ன செய்தோம்.. எதைப்படம்பிடித்தோம் என்றுகூட பார்க்காமல் உடனடியாக ரெண்டிங்காகிவிடவேண்டும் என்ற அவசரத்தில் கவனிக்காமல் ஒருவேளை பதிவேற்றம் செய்திருக்கலாம்.

 

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்